Home » , » Dental Health for Pregnant Women - கர்பிணிகளுக்கு பல் ஆரோக்கியம்

Dental Health for Pregnant Women - கர்பிணிகளுக்கு பல் ஆரோக்கியம்

Written By meena on Thursday, 10 October 2013 | 16:00

Dental Health for Pregnant Women - கர்பிணிகளுக்கு பல் ஆரோக்கியம்

by tnkesaven
New Tamil

சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு முதலில் பல் சோதனை செய்து, ஏதேனும் பிரச்னை இருந்தால், உடனடியாக சிகிச்சை அளிப்பது வழக்கம். கர்ப்ப காலத்தின் போது ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சிலருக்கு பற்களில் பிரச்னைகள் தோன்ற வாய்ப்பு உள்ளது.

மேலும், ஏற்கனவே பல் சொத்தை இருந்தால் அதனால் வளரும் சிசுவுக்கும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பல் சொத்தையில் இருந்து கிருமிகள் எச்சில் வழியாக உணவில் கலந்து அதனால் வயிற்றில் வளரும் சிசுவை பாதிக்கலாம்.

எனவே தான் கர்ப்பிணிகளுக்கு பல் சோதனையும், சிகிச்சையும் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
கர்ப்பிணிக்கு பற்களில் ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனடியாக அவர் பல் மருத்துவரிடம் சென்று, கர்ப்பமுற்றிருப்பதை முதலில் தெரிவித்துவிட்டு, பல்லுக்கு சிகிச்சை பெறுவது அவசியம்.

ஹார்மோன் மாற்றங்களால் சிலருக்கு ஈறு அழற்சி கர்ப்ப காலத்தில் தோன்றுவதும் உண்டு.

இது பொதுவாக கர்ப்ப காலத்தின் 2 அல்லது 3வது மாதத்தில் தொடங்கி, 8வது மாதத்தில் தீவிரமாகி, 9வது மாதம் குறைய ஆரம்பிக்கும்.

ஈறுகளில் அழற்சி, வீக்கம், ரத்தம் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள்.

சிலருக்கு வீங்கிய ஈறு திசுக்களில் கட்டிகளைப் போன்றும் உருவாகும்.

ஆனால், அவற்றில் வலியிருக்காது.

எனினும், பிரசவத்துக்குப் பிறகு இதன் பாதிப்பு குறையும்.

சிகிச்சை எடுத்துக் கொண்டால் பூரண குணம் அடையலாம்.

பற்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்
ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் கர்ப்பிணிகள் பல் தேய்க்க வேண்டும்.

மேலும், கால்சியம் அதிகம் நிறைந்த உணவு பொருட்களான பால், தயிர் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
மசக்கை காரணமாக அடிக்கடி வாந்தி எடுக்கும் கர்ப்பிணிகள், ஒவ்வொரு முறையும் வாந்தி எடுத்த பிறகு பற்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

courtesy;''dinamani

Show commentsOpen link

1 comments:

  1. Contact {hackingloop6 @ g m a i l . com} for any hacking assistance,he helped me hack and gained remote access to my husband's phone activities during divorce,i was able to gain custody of my kid..He's a reliable hacker,tell him I referred you.  

    ReplyDelete

Popular Posts

Tags

Popular Posts

Powered by Blogger.